முகத்தில் தழும்பு என்பது சிலருக்கு காயங்களால் வரும் சிலருக்கு பருக்களால் வரும்.
இந்த தழும்புகளை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அது நாளடைவில் கருமையாக மாறுவதற்கு வழி வகுக்கும். இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகிறது.
இந்த முகத்தழும்புகளை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தழும்பு
சந்தனம் எமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அழகுசாதனப்பொருளாகும். இது முகத்தழும்பு போக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மட்டுமின்றி, வெயிலால் ஏற்பட்ட கருமையும் அகலும். 15 நாட்கள் சக்கரை சேர்க்காத எலுமிச்சை பழச்சாறை குடித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் சரியாகும்.
பாதாமை ஊறவைத்து அரைத்து அதனுடன் முட்டை ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தினமும் பூசி வந்தால் தழும்புகள் இல்லாமல் போகும். உருளைகிழங்கை முகத்தில் அரைத்து பூசி வர வேண்டும்.
இதில் பொட்டாசியம், சல்பர் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளதால் முகத்தில் உள்ள தழும்புகளை விரட்ட உதவும்.