உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் கடை ஆசை குறித்த தகவ் வெளியாகியுள்ளது.
பாலித தெவரப்பெரும நேற்று (16) தனது வீட்டில் இரண்டு மின் கம்பிகளை இணைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சொந்த வண்டியில் எடுத்துச் செல்ல வேண்டும்
அவரின் ன் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அவரை நல்லடக்கம் செய்வதற்காக களுத்துறையில் அவரது புதைகுழியை பாலித ஏற்கனவே தயார் செய்திருந்தார்.
இந்நிலையில் அவர் இறந்த 24 மணி நேரத்திற்குள் அவரது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும், அவரது உடலை அவரது சொந்த வண்டியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் அவரது கடைசி ஆசை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.