50க்கும் மேற்பட்ட நாடுகளில் இலங்கைக்கு வரும் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான பிரேரணை சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.