முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும நேற்று முன் தினம் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மத்துகம பொலிஸார் மற்றும் களுத்துறை விசேட புலனாய்வுப் பிரிவினரால். பன்றிகளைக் கொல்வதற்காக வேறொருவரால் இழுக்கப்பட்ட மின்சார கேபிள் மரணத்திற்கு காரணமா என்பது பொலிஸ் குழுக்களின் கேள்வியாக உள்ளது.
அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்
அதேவேளை இதற்கு முன்னரும் இந்த நிலத்தில் சட்டவிரோதமாக பன்றிகளை கொல்லும் வகையில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காணியை சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாததால் எவரும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். அதோடு சம்பவத்தின்போது மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியதால், பாலித தெவரப்பெரும மின்கம்பிகள் தொடர்பான ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் , உடல் உறுப்புகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்காக உடல் நேற்று இரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பாலித தெவரப்பெருமவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தொடங்கொட, யடதொலவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் வீதியின் இருபுறங்களிலும் வெள்ளைக் கொடிகள் மற்றும் இரங்கல் பதாதைகள் காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில் பெருமளவான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இலங்கையின் மூவின மக்களிடன் மனங்களிலும் இடம்பிடித்திருந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.