பொலிஸாரின் சிசிடிவி கமெரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதற்கட்டமாக கொழும்பு நகரில் இரண்டாயிரம் தனியார் சிசிடிவி கமராக்கள் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்பட உள்ளன.
பொதுமக்களுடன் கைகோர்க்கும் பொலிஸ்
இத்திட்டத்தில் சேர விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து , இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமராக்களின் வரம்பை விரிவுபடுத்துவதுடன், ஏனைய பகுதிகளில் உள்ள கமெரா அமைப்புகளும் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் இலட்சக்கணக்கான தனிப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் இருந்தாலும், நாட்டில் குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் அவற்றின் பங்களிப்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.
அதேவேளை காவல் துறையிடம் 176 கேமரா அமைப்புகள் மட்டுமே உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.