எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இவ்வாறு தெரிவித்தார்