இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
இன்று ஆரம்பமான 18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்
இந்நிலையில் திரைப்பிரபலங்க்லள், மற்ரும் அரசியல்வாதிகள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வரும் நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். அதேவேளை நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக தலைவரான பின் செலுத்தும் முதல் வாக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.