நாடளாவிய ரீதியில் உள்ள 354 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தற்போது 9,147 சிறுவர்கள் காணப்படுவதாக நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாற்றீடான பாதுகாப்பின் கீழ், சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதுடன், சிறுவர்கள் குடும்பமொன்றின் கீழ் வளர்வது அவசியமானது என நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான பாதுகாவலரின் குடும்பத்தின் கீழ் சிறுவர்கள் வளர வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் பணியாற்றுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.