நுவரெலியாவில் (Nuwara Eliya) சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, நுவரெலியா – ஒலிபண்ட் தோட்டத்தில் நேற்றிரவு (18.04.2024) மீட்கப்பட்டுள்ளது.
பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்தவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் சடலமாக காணப்பட்டாரென பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.