காலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியும், கொள்கலன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும், ஏழு வயது பேத்தியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி, மகள் மற்றும் 18 வயது பேரன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கொள்கலன் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.