பிரபல வர்த்தகர் ஒருவரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டு
அமைச்சர் மகிந்த அமரவீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றை அவமரியாதை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்க கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவி நாடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற அவமரியாதை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சித்து வரும் நாட்டின் முன்னணி வர்த்தகர் ஒருவரிடம் மைத்திரிபால சிறிசேன, 100 மில்லியன் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கையை குறித்த வர்த்தகர் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் சந்திப்பு நடைபெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அவரது நிதி விவகாரங்களுக்காகவும் சுதந்திரக்கட்சி பயன்படுத்தப்படுவது துர்ப்பாக்கிய நிலைமையாகும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.