நாம் செய்யும் கரும வினைகளை நமக்கு உணர்த்துவதற்காக சனிபகவான் நம்மில் வந்து தங்கி கொள்வார்.
இதன்போது நாம் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் வாழ்கையில் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம். சனிபகவானின் வாகனமாக திகழ்வது இந்த காகமாகும்.
இந்த காகத்தை நாம் அலட்சியம் செய்ய கூடாது. சிலர் காகத்திற்கு உணவு வைப்பார்க்ள். அப்படி உணவு வைக்கும் போது எப்படியான உணவு வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தீராத தோஷம்
சனிக்கிழமைகளில் சனிபகவானுக்காக விரதம் இருப்பதால் தோஷம் நீங்காது ஆனால் சனிபகவானின் பிடியில் இருந்து தப்பிக்க சில வாய்ப்புக்கள் கிடைக்கும்.
இந்த சனிக்ழமை நாளில் காக்கைக்கு உணவு வைத்தால் அது நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரும்.
இப்படி காகத்திற்கு உணவு வைக்கும் போது அமாவாசை,திதி போன்ற நாட்களில் மட்டும் காகத்திற்கு உணவு வைக்காமல் தினமும் நாம் சமைக்கும் உணவை காகத்திற்கு வைத்தால் நம் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நல்வாழ்வு அமையும்.
கடன் தொல்லைகள் இருந்தால் இவை நீங்கி வருமானம் பெருகும். ஒவ்வொரு நாளும் உணவு வைக்கும் போதும் மிஞ்சிய உணவுகள்,முந்தைய நாள் சமைத்த உணவுகளை காகத்திற்கு வைத்தால் தோஷம் ஏற்படும்.
மற்றும் எச்சில் படாத உணவு,புதிதாக சமைத்த உணவை காகத்திற்கு வைத்து பின் உணவு உண்டால் துன்பங்கள் விலகி பேரின்ப வாழ்வு கிடைக்கும்.
தினமும் புதிதாக சமைத்த உணவு,அதனுடன் தண்ணீர் சேர்த்து காகத்திற்கு வைத்தால் சிறந்த பலன் கிடைக்கும். காகத்திற்கு உணவு வைத்தால் இந்த முறையில் வைப்பது நன்மை தரும்.