ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1000 மில்லியன் ரூபா
குறித்த கடிதத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 1000 மில்லியன் ரூபா நட்டம் அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.