கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வகுகவ்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் நேற்றைய (25) தினம் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த அனர்த்தில் வீட்டின் சொத்துக்கள் அனைத்தும் சேதமாகி அனைத்தும் இழந்த குடும்பம் நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நேற்றைய தினம் (25) கணவர் வேலைக்கும் மகள் பாடசாலைக்கும் சென்றிருந்த வேளையில் மனைவி அரசாங்கத்தால் வழங்கப்படும் அரிசியினை பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார்.
இதன்போது மின்னொழக்கு ஏற்பட்டு வீடு முற்றாக தீக்கிரையாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் கிராம சேவகருக்கும் கம்பளை உடபளாத்த பிரதேச செயலகத்திற்கும் புஸ்ஸல்லாவ பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.