யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் (25) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.
கடத்தப்பட்டு கொலை
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதியில் இருந்து ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.