வட மாகாணத்திலுள்ள ஆலயங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் தொடர்பில் தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் புங்குடுதீவு அம்மன் ஆலயத்தில் கடவுளுக்கு சாத்திய சேலை ஒன்று 16 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து சிங்களவர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் யாழில் ஆலயம் ஒன்றின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது
ஏலத்தில் தேங்காய்
சங்கானை ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏலத்தில் தேங்காய் ஒன்று 4000 ரூபாவிற்கு ஏலம் போனது.
14 தேங்காய்கள் இவ்வாறு பக்தர்கள் மத்தியில் ஏலம் விடப்பட்டது. இதன்போது, தேங்காய்கள் அதிக விலைக்கு விற்பனையானது. ஒரு தேங்காய் மட்டும் 4000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி 13 தேங்காய்கள் ஒவ்வொன்றும் 2000 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான ஏலத்தின் போது உள்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் பலரும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கண்ணகி அம்மன் ஆலயலத்தில் 16 இலட்சம் ரூபாவுக்கு சேலையை ஏலத்தில் எடுத்தவர்கள், கனடாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.