மாலைதீவின் விமான சேவை நிறுவனமான மாலைதீவு ஏயார்லைன்ஸ் (Maldivian Airlines), தலைநகர் மாலேயில் (Male) இருந்து இலங்கையின் கொழும்புக்கு தனது சமீபத்திய விமானப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாலைதீவு ஏர்லைன்ஸின் முதல் விமானம் நேற்று (25.04.2024) 138 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான (Bandaranaike International Airport) நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு விமானங்கள்
இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் பயணிகள் வரவேற்கப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து கண்டியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மாலைதீவு ஏயார்லைன்ஸ் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.