ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
106 இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் 12 இலட்சம் ரூபாவை செலுத்தி லிதுவேனியாவிற்கு சென்றுள்ளனர் .
104 பேர் பன்றிக்கூண்டுகளில் வேலை
அங்கு சென்ற பிறகு இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதிகள் வேலை வழங்கப்பட்டதாகவும் , மற்றையவர்கள் பன்றிக் கூடுகளில் வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் தெரிவித்தார் .
அதேவேளை இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்பு விசாக்களை லிதுவேனியா அரசு ரத்து செய்ததுள்ளதுடன் ஒரு நாளைக்கு 10 யூரோக்கள் செலவழித்து இவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளனர் .
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இருவர் மாத்திரம் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் .
லிதுவேனியாவிலிருந்து இலங்கை வர இதுவரை சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அவர்களுடைய வீடுகளை அடகு வைத்து இந்தப் பணத்தைச் செலவிட்டதாகவும் நாடு திரும்பியவர் கவலை வெளியிட்டுள்ளார்.