சட்டவிரோதமாக இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர், இலங்கையை சேர்ந்த 17 சிறார்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வௌியேற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



















