அனுராதபுரம் – நொச்சியாகம மானெல் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றையதினம் (27-04-2024) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் மானெல் ஆற்றில் மூழ்கிய நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நொச்சியாகம ஹல்மில்லேவ பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.