வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வானது, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 2018 – 2023 ஆண்டு வரையில் 78 சதவீதத்தில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை 54 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது.
காரணம்
இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாதவர்கள் தாய்நாட்டின் மீதுள்ள உணர்வினால் வெளிநாடு செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், வெளிநாடு செல்ல விரும்பாதவர்கள் 33 சதவீதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.