களுத்துறை – பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (05-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சியின் போது இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பழம் வெட்டும் கத்தியால் குறித்த சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.