நாட்டில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
3,200 தொலைதூர சேவை பெருந்துகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுகிறனர் என தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுகின்ற பேருந்துகளை கண்டறிந்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.