இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸ (Agunukolapelessa) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மே மாதத்தில் முட்டை விலை
அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாதத்தில் முட்டையின் விலை கணிசமாக குறைய வேண்டும்.
இந்த நிலையில், முன்னதாக இந்திய முட்டை இறக்குமதியை நிறுத்தியதன் பின், சில வர்த்தகர்கள் முட்டை விலையை தன்னிச்சையாக அதிகரித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.