காதலியை காண சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காடொன்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.




















