வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர் நாட்டில் வாழும் நபர் ஒருவர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக உள்ள தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர்.
12 இலட்ச ரூபாய்க்கு ஈடு
உறவுக்காரர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் , யாழ்ப்பாண பொலிஸ் முறைப்பாடு செய்ததை அடுத்து, அது விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
அதன் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.