மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மொட்டுக் கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிளாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.