இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம்(16) மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.