உள்ளங்கையில் இருக்கும் ரேகையில் பணத்திற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உள்ள சம்பந்தக் கோடு குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
கைரேகையின் படி உள்ளங்கையில் இருக்கும் ஒவ்வொரு கோடுகளுக்கும் மர்மமான அர்த்தமும், அடையாளமும் இருக்கும்.
இதன் மூலம் ஒருவரின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் இவற்றினை மிக எளிதாக கணிக்க முடியும். அந்த வகையில், கையில் இருக்கும் வரிகளில் ஒன்று பணக் கோடு ஆகும்.
ஒரு நபரின் கையில் உள்ள பணக் கோடு அவரது அதிர்ஷ்டத்தை குறிக்கும், அந்த ரேகை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
உள்ளங்கையில் பணக் கோடு எங்கே?:
உள்ளங்கையில், வாழ்க்கைக்கோடு போன்று பணக் கோடும் ஒரே இடத்தில் தொடங்ககாமல், வெவ்வோறு இடங்கள் மற்றும் மலைகளால் உருவாகும்.
பணக்கோடு கையின் மிகச்சிறிய விரலுக்கு கீழே, அதாவது புதன் மலையிலிருந்து தொடங்குகின்றது. இந்த கோடானது குறித்த நபரிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை கூறுகின்றது.
உள்ளங்கையில் தெளிவான பணக் கோடு இருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள் என்று கைரேகை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கைரேகையின் படி, உங்கள் உள்ளங்கையில் வாழ்க்கைக் ரேகை, விதி ரேகை மற்றும் மூளைக் ரேகை ஆகியவற்றின் கலவைகள் M வடிவமாக உருவாகியிருந்தால், 35 முதல் 55 ஆண்டுகளுக்குள் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
மேலும் திருமணத்திற்கு பின்பு பணம் உங்களது வாழ்க்கையில் வேகமாக நுழையும் என்பதையும் குறிக்கின்றதாம்.
ஆனால் குறித்த பணக்கோடு ரேகை வளைந்தோ, உடைந்தோ, தெளிவு இல்லாமலோ இருந்தால் உங்களிடம் பணமிருந்தும், அதனை இழக்க நேரிடுமாம். மேலும் வாழ்நாள் முழுவதும் பணம் இல்லாமல், நிதி நிலைமையில் ஏற்ற தாழ்வுகளும் காணப்படும்.
நபர் ஒருவரின் கையின் பண ரேகை துண்டு துண்டாகவும், தெளிவு இல்லாமல் இருந்தால் பணம் சம்பாதிப்பதில் அதிகமான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று அர்த்தம்.
ஆனால் நபர் ஒருவருக்கு பணக் கோடு இல்லாமல் இருந்தால், அவரது விதிக்கோட்டியிலிருந்து பணம் தங்குமா? என்பதை மதிப்பிடலாம்.
அதிலும் குறிப்பாக அவரது விதி வரிசை நன்றாக இருந்தால் மட்டுமே அந்த நபரால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.