தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது இறப்புக்கு அஞ்சலிசெலுத்துவதற்காகவென்று கூறிக்கொண்டு சுவிஸ் இருந்து சில உறவுகள் டென்மார்க் நோக்கிப் பயணமாகிக்கொண்டிருக்கின்ற வீடியோக் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
‘எங்கே போய்க்கொண்டிருக்கின்றீர்கள்’ என்று பயணம்செய்துகொண்டிருக்கும் ஒருவரிடம் கேட்கப்படுகின்றது.
‘தலைவர் இறப்பின் கொண்டாட்டத்திற்காகப் போய்கொண்டிருக்கின்றேன்’ என்று பதில் வழங்குகின்றார்.
ஒரு சிறுவனிடம் ‘தலைவருக்கு விளக்கேற்றுவதற்காகவா சென்றுகொண்டிருக்கின்றீர்கள்’ என்று கேட்க.. ‘இல்லை.. தெரியாது..’ என்று அவன் பதில் வழங்குகின்றான்.
ஒரு பக்கத்தில் சிலர் சீட்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
பேரூந்தில் சில நண்பர்கள் இணைந்து சுற்றுலா செல்வதான காட்சி மே-18 அன்று வெளிவந்தது- தலைவருக்கு அஞ்சலி செலுத்ததப்போகின்றோம் என்ற பெயரில்.
அனேகமானவர்களுக்கு தலைவரின் இறப்பு பற்றிய கவலையே இல்லைபோல தெரிகின்றது.
அதேவேளை, உண்மையான நோக்கத்ததை உணர்ந்துகொண்ட ஒருசிலரும் அந்தப் பேரூந்தில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.