பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, லாகூரில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்த விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவ விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் தீப்பிடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், விமான நிலையம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், புகை மற்றும் மக்களிடையே பீதியைக் காட்டும் காணொளியொன்று வைரலாகி வருகிறது.
Lahore Airport is burning 🔥
— SUDHIR (@seriousfunnyguy) April 26, 2025




















