கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (20) மாலை பலத்த காற்று வீசியதில் வீதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் விளம்பரப் பலகை சரிந்து வீழ்ந்துள்ளது.
எனினும் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவரும் பாதிக்கப்படவில்லை. அருகிலிருந்த சில கடைகளின் மேற்கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. அதேவேளை பலத்த காற்றினால் நாடளாவிய ரீதியில் மின்சார தடையும் ஏற்பட்டது.
நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால், காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (21)மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் , காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.