இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம்(22-05-2024) மூடப்படும் என நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், நிலைமைக்கு அமைய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.