முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்றுடன் (21) 41 வருடங்கள் கடந்துள்ளது.
இந்த நிலையில் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில், மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் , எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது.
அன்புள்ள ஷிராந்திக்கு….
நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம். ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை எதிர்கொண்டாலும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சமமாகத் தாங்கிக்கொண்டாள்.
மனைவியாக, தாயாக, தோழியாக, பாட்டியாக உங்கள் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கெல்லாம் மிக்க நன்றி! அன்புள்ள ஷிராந்திக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என மஹிந்த பதிவிட்டுள்ளார்.