இந்தியாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் ரஜினிகாந்த் கூறுகையில்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கோல்டன் விசா பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேவேளை, இந்திய நடிகர்கள், நடிகைகள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
நடிகைகள் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.