யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கிளிநொச்சி- கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.