யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து வைத்த வைபவத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
“இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் இரண்டாவதாக 5 வருடங்களிற்கு முன்னர் கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
தேசிய வைத்தியசாலை
மூன்றாவதாக அண்மையில் காலி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை யாக தரமுயர்த்தப்பட்டது.
இனிவரும் காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது காலத்தின் தேவை” என ஜனாதிபதி கூட்டிக்காட்டியுள்ளார்.