மன்னாரில் உள்ள பகுதியொன்றில் காதல் விவகாரத்தால் பல நாட்களாக இடம்பெற்ற பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (25-07-2024) பேசாலை முருகன் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காதல் சார்ந்த விவகாரம் ஒன்றினால் பல நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதியின் சகோதரர்களுக்கும் இளைஞனுக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள யுவதியின் குடும்பத்திற்கு சொந்தமான கடைக்கு மர்ம நபர்கள் சிலர் பெற்றோல் குண்டு ஒன்றை வீசியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் சில இளைஞர்கள் குடி போதையில் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் தாக்குதலுக்கு உள்ளாகி இரு பகுதியினரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பல சிசிரிவி காணொளிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்ட போதிலும், இதுவரை எவரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது