போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உமேஸ் பாலா ரவீந்திரன் என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறை
கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சென்ற குறித்த நபர் அரச ஆவணங்களை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் 2014ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நபர் மீண்டும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள், கைத்துப்பாக்கியொன்று உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நபரின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இலங்கைக்கு வருகைதர முயற்சித்த போது அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவண குற்றச்செயல் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.