இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பராமரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.