பத்தரமுல்லை (Battaramulla) – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அந்த இடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் (Prasanna Ranatunga) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.