புகையிரத பாதையில் பயணித்த இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை குரே வீதியைச் சேர்ந்த மொஹமட் இருபான் மொஹமட் இமாட் என்ற 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞன் ஹெட்போனில் பொருத்திக் கொண்டு புகையிரதப் பாதையில் நடந்து சென்றூல்ளார்.
இதன்போது, அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல தடவைகள் ஹோர்ன் ஒலித்த போதும், சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்ட போதும் அவர் புகையிரத பாதையில் இளைஞர் பயணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.