நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது இன்ப்ளுவென்ஸா யு மற்றும் டீ வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும், இன்ப்ளுவென்ஸா தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி
காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது இன்ப்ளுவென்ஸா வைரஸ் தொற்றாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குளிர் காலத்தில் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் எனவும், வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முகக் கவசங்களை பயன்படுத்துமாறும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.