அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 125,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு
கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில வாரங்களில் நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்த வாரத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்றும், நிவாரணப் பயன் பெறத் தகுதியான உண்மையான ஏழை மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் முதல் சுற்றில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும், புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் சமூக பாதுகாப்பு தரவு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.