சித்தார்த் – அதிதி
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களும் வைரலானது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என தகவல் வெளிவந்தது. அதன்பின் தான் தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது என இருவரும் தங்களது உறவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.
திருமணம்
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சித்தார்த் – அதிதி திருமணம் என்பது என கேட்க துவங்கிவிட்டனர். இந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் தான் சித்தார்த் – அதிதி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடக்கவிருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதை அறிவோம். அதே போல் நடிகை அதிதியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான். ஆகையால் இது இருவருக்குமே இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.