புதிய இணைப்பு
இந்திய(India) மக்களவை தேர்தலின்முதல் சில சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 302 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 208 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் தரவுகளின்படி,கடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சியின் வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
New Update – 10:40
இரண்டாம் இணைப்பு
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 172 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
New Update – 09:26
முதலாம் இணைப்பு
இந்திய(India) மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிக்கிறது.
பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 168 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 119 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் 13 இடங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.