2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.
இன்று (05.06.2024) முதல் எதிர்வரும் 19.06.2024 வரை பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம்
பாசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் (www.doenets.lk) பிரவேசித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.