கொத்மலை கெரண்டி நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற இளம் ஜோடி, அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
இருவருக்கும் இடையில் தகராறு
புஸ்ஸல்லாவ , ப்ரோடெக் தோட்டத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம் காதல் ஜோடியே தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்த இளம் ஜோடி, பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட இளம் ஜோடியை புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.