கோடை கால பழமான தர்பூசணி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்பது பலரும் அறிந்த விடயமே ஆனால் தர்பூசணியை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் நன்மைகளுக்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தர்பூசணியை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
உப்பு
சிலருக்கு தர்பூசணியை நறுக்கி, அதில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கின்ற போதும் தர்பூசணியில் உப்பைத் தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்றாலும், அதன் பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்து
குறைந்த கலோரி கொண்ட இந்த பழத்தில் சிறிது உப்பு சேர்ப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. தர்பூசணி சாப்பிடுவதன் முழு நன்மைகளையும் நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தர்பூசணியை உப்பு கலந்து உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்
இரத்த அழுத்தம்
தர்பூசணியில் உப்பைப் போட்டால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பல கடுமையான நோய்களைச் சந்திக்க நேரிடும். தர்பூசணியை இவ்வாறு உட்கொள்வதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்கனவே BP பிரச்சனை இருந்தால், தர்பூசணியை உப்பு சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
சாப்பிடும் நேரம்
இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அத்தியாவசியமான இந்த ஊட்டச்சத்தை அதிகம் உள்ளதால் தர்பூசணி உட்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்