ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ருவாண்டா என்ற இந்த ஆபிரிக்க நாட்டை அவர்கள் திறந்த சிறை என்று விபரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன.
ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ருவாண்டா என்ற இந்த ஆபிரிக்க நாட்டை அவர்கள் திறந்த சிறை என்று விபரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன.
இந்தநிலையில், பிபிசி ருவாண்டாவுக்கு சென்று அங்குள்ள புலம்பெயர்ந்த நான்கு தமிழர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இருந்து அனுப்பப்பட்ட தமக்கு சிக்கலான மருத்துவத் தேவைகள் ருவாண்டாவில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குறித்த நால்வரும் தெரிவித்துள்ளனர்.
சுய சிறையிலடைக்கப்பட்டவர்கள்
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்திற்கு 50 டொலர்கள் வழங்கப்படுகின்றன.
எனினும், அவர்கள் ருவாண்டாவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
தாம் நான்கு பேரும் தெருவில் துன்புறுத்தல் மற்றும் தேவையற்ற பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.
தம்மை பொறுத்தவரையில் தாம் “சுய சிறையிலடைக்கப்பட்டவர்கள்” என்று குறித்த நால்வரும் கூறியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை
வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ளது. இந்தநிலையில் தமக்கு நிரந்தரமாக இங்கிலாந்தில் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்று காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
தவறகன முடிவு முயற்சிகளுக்குப் பின்னரே இந்த நான்கு இலங்கைத் தமிழர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்கள் இப்போது இராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறி, தலைநகர் கிகாலியின் புறநகரில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரித்தானிய அதிகாரிகளால் பணம் செலுத்தப்படும் குடிமனையில் வாழ்கின்றனர்.
இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு செல்ல முயற்சித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் மூன்று பேரில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளடங்குகிறார்
நான்காமவர் குறித்த பெண்ணின் தந்தையாவார். தமது மகளுடன் ருவாண்டாவில் தங்கியிருக்க அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும் ருவாண்டாவுக்கும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த இலங்கை தமிழர்கள் ருவாண்டாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையிலும் டியாகோ கார்சியாவிலும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த தமிழ் பெண் கூறியுள்ளார்.
ருவாண்டாவில் தமக்கு தொந்தரவுகள் இருக்கின்றபோதும், பொலிஸாரின் உதவிக்கு அணுகவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், துஸ்பிரயோகத்தின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சீருடை அணிந்த சட்ட நடைமுறைப்படுத்தலை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்
இராணுவ மருத்துவமனை
எனினும், டியாகோ கார்சியா முகாமில் இருந்ததை விட ருவாண்டாவில் தங்களின் வாழ்க்கை நிலைமை சிறப்பாக இருப்பதாக கார்திக் மற்றும் லக்சானி என்ற பெயர்களை கொண்ட இந்த இலங்கை தமிழர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் தவறான முடிவு முயற்சியைத் தொடர்ந்து டியாகோ கார்சியாவிலிருந்து விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது தமிழர், இன்னும் இராணுவ மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாம் இலங்கைக்கோ இங்கிலாந்துக்கோ செல்லமுடியாது என்றநிலையில், ருவாண்டாவில் இருக்க விரும்பவில்லை என்றால்,பாதுகாப்பான மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை டியாகோ கார்சியா முகாமுக்குத் திரும்பலாம் என்று அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இலங்கையர் குழுவினரை நிரந்தரமாக மீள்குடியேற்ற ருவாண்டா “பாதுகாப்பான மூன்றாவது நாடாக” கருதப்படுகிறதா என்ற பிபிசி கேள்விகளுக்கு இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் பதிலளிக்கவில்லை.
இது இவ்வாறிருக்க மேலும் சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னும் டியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாங்கள் டியாகோ கார்சியாவிற்கு வந்தபோது தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக பிரித்தானியாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது எங்கள் வாழ்க்கையை முடக்கியதற்காக அவர்களுடன் கோபப்பட வேண்டுமா என்று ருவாண்டாவில் வசிக்கும் மயூர் என்பவர் அவரின் ஆதங்கத்தை பிபிசியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.